அரை நிர் வாண போஸ் கொடுத்ததால் வீதியில் வசிக்கும் ஈரான் மொடல்!!

443

ஈரான் மொடல்

ஈரான் நாட்டைச் சேர்ந்த மொடல் ஒருவர், அரை நிர் வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததால், அவரது நாட்டில் தண்டனைக்கு தப்புவதற்காக பிரான்சுக்கு தப்பியோடி வந்த நிலையில், தெருவில் தூங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

நாட்டின் சட்டங்களை மீறி அரை நிர்வாண போஸ் கொடுத்த ஈரானிய மொடலான Negzzia (29), அரசாங்கத்திடம் சிக்கினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும், சவுக்கடி வாங்க வேண்டியிருக்கும் என்பதால் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

Negzzia முன்பு வேலை செய்த புகைப்படக்காரர் ஒருவர், அவரது அரை நிர்வாண புகைப்படங்களை பொலிசாரிடம் கொடுத்ததையடுத்து ஈரானிலிருந்து தப்பி துருக்கிக்கு ஓடினார். பின்னர் பாரீசுக்கு வந்த அவர், புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் உடனடியாக ஒன்றும் நடந்தபாடில்லை.

பாரீஸ் என்றதும் மொடலாக வேலை செய்யலாம் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை. தங்க இடமின்றி, தெருவோரத்திலும், பூங்காக்களில் உள்ள பெஞ்சுகளிலும் படுத்து உறங்கினார் Negzzia.

ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கு வழியின்றி, தான் வைத்திருந்த பையை துணிகளுடன் சேர்த்து 10 யூரோக்களுக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது Negzziaவுக்கு. பின்னர் சமூக ஊடகங்களில் அவரது கதை வெளியாக, சர்வதேச ஊடகங்களின் பார்வை அவர் மீது திரும்பியது.

அதனால் தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடத்தில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கிடையில் அவரது விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் Negzziaவை தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவரது விண்ணப்பம் குறித்து ஆவன செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.

தான் ஈரானை விட்டு வந்ததற்காக வருத்தப்படவில்லை என்று கூறும் Negzzia, தான் ஈரானின் கட்டுப்பாடுகள் நிறைந்த மதச் சட்டங்களிலிருந்து தப்பி வந்த பெண்என்கிறார். பெண்களுக்கு எந்த மரியாதையும் அளிக்காத நாட்டின் சட்டங்களை மீறி வெளியே வந்த பெண் என்பதில் தான் பெருமை கொள்வதாக தெரிவிக்கிறார் Negzzia.