11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி-வில்லியம்சன் : உலகக்கோப்பையில் சுவாரஸ்ய நிகழ்வு!!

455


கோஹ்லி-வில்லியம்சன்



உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோஹ்லி தலைமையிலான அணியும், வில்லியம்சன் தலைமையிலான அணியும் மோத உள்ளன.



இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போட்டியை நினைவுபடுத்துகிறது.




அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைவராகவும், கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் தலைவராகவும் செயல்பட்டனர்.


அந்தப் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கோஹ்லியும், வில்லியம்சனும் மோத உள்ளனர்.

எனவே, நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணியை பழிதீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 2008ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடிய ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் விளையாடிய டிம் சவுதியும் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர்.