எதிர்பார்த்ததனை விடவும் நன்றாக விளையாடினோம் : இலங்கை அணித் தலைவர்!!

4


இலங்கை அணித் தலைவர்


தமது எதிர்பார்ப்பினை விடவும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. இதன்போது அணித் தலைவர் திமுத் கருணாரட்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.


இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், அணியைத் தெரிவு செய்யும் போது இருக்கும் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


அணியின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள் அவர்கள் ஒத்துழைப் வழங்கியிராவிட்டால் புள்ளிப் பட்டியலில் 5ஆம் இடத்தை அடைந்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஆரம்பப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கத் தவறியமை முன்னோக்கிச் செல்வதில் தடையாக அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகளின் முடிவில் தோல்வியடைந்திருந்தால் வீடுகளுக்கு கல் வீசப்படும் என்ற போதிலும் இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கிடையாது என திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.