கஞ்சா விற்பனை செய்யும் பெண்ணை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

871

femaleஅம்பலாந்தொட்ட வலேவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் நடத்தி வரும் சில்லறை விற்பனை கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் அந்த கடையை சோதனையிட சென்றிருந்தனர்.

பொலிஸார் கடையை சோதனையிட சென்ற பொழுது கடை உரிமையாளரான 57 வயதான பெண் தனது ஆடைகளை முழுமையாக அவிழ்த்து முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு கூறி கூச்சலிட்டு பொலிஸாருக்கு தடையேற்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் பெண்ணின் மகள் அந்த இடத்திற்கு வந்து மேலாடையை கழற்றி விட்டு, பொலிஸார் தனது தாய்க்கு தொந்தரவு கொடுப்பதாக கூச்சலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அம்பலாந்தொட்ட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சமன்ஜித்தின் ஆலோசனையின் பேரில் சில பெண் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆடைகள் இன்றி இருந்த பெண் மீது துணியை போர்த்தி பின்னர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதன் பின்னர் கடையை சோதனையிட்ட பொலிஸார் கடையில் இருந்து 500 மில்லி கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.