கிறிஸ்மஸில் இரசிகர்களை ஏமாற்றிய விஜய்!!

281

Vijay

கிறிஸ்மஸ் நாளில் விஜயின் ஜில்லா பட டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம். ஆனால் அறிவித்தபடி இவற்றை வெளியிடவில்லை அந்த நிறுவனம். இப்போது வரும் டிசம்பர் 31ம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த ட்ரைலரை இரசிகர்களுக்கு விஜய் தரும் தீபாவளிப் பரிசு என்று வர்ணித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த பரிசு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர் இரசிகர்கள்.

பொங்கலுக்கும் முன்பே ஜனவரி 10ம் திகதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில் இன்னும் படத்தின் ட்ரைலரே தயாராகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய் – மோகன் லால், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க, ஆர்டி நேசன் இயக்கியுள்ளார்.

எப்படியும் டிசம்பர் 31ம் திகதிக்குள் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுவிடுவோம் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜில்லா குழு.