17 பேர் பலியாக காரணமான துபாய் சாரதிக்கு என்ன தண்டனை தெரியுமா? வெளியானது தீர்ப்பு!!

497

துபாயில் சாலை விபத்து

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் சாலை விபத்தில் சிக்கி 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாவதற்கு காரணமான சாரதிக்கு சிறைத்தண்டனை, நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 6 ஆம் திகதி ஓமனிலிருந்து துபாய்க்கு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. துபாயில் பேருந்துகளுக்கு ஒதுக்கப்படாத பகுதிக்குள் நுழைந்த அந்த பேருந்து, சிக்னல் இரும்புக் கம்பி மீது பலமாக மோதியது.

அதில், பேருந்தின் இடது ஓரத்தில் இருந்த பயணிகள் 17 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 13 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரு பாகிஸ்தானியர்கள், ஓமன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்கும்.

இந்த விபத்து தொடர்பாக துபாய் போக்குவரத்து நீதிமன்றம் விசாரணையை முன்னெடுத்தது.
விசாரணையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த சாரதி 53 வயதான முகமது அலி தமாமி மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சாரதிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், துபாய் நிர்வாகத்துக்கு 13,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் செலுத்தவும்,

பலியானவர்கள் குடும்பத்துக்கு 92,500 அமெரிக்க டொலர்கள் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மட்டுமின்றி, சிறைத்தண்டனை முடிந்ததும் குறித்த சாரதியை ஓமன் நாட்டுக்கு நாடு கடத்தவும் தீர்ப்பாகியுள்ளது.