நடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம் : தூக்கி எறியப்பட்ட பயணிகள்!!

272

கொந்தளித்த விமானம்

கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் மீது நடுவானில் மின்னல் தாக்கியதை அடுத்து, அவசரமாக அமெரிக்காவின் ஹவாயில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன், நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டுள்ளது.

ஹொனலுலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இதில் நிலைகுலைந்த விமானம் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளது. பயணிகள் அனைவரும் இருக்கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். உடனே அங்கிருந்து வேகமாக திருப்பப்பட்ட விமானம், அமெரிக்காவின் ஹவாயில் அதிகாலை 6.45 மணியளவில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதில் 35 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான பயணிகளுக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.