கடும் காற்று

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.

இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும், ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் 3 வீடுகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரம்பமடு பகுதியில் ஓரு வீடும் என 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் காரணமாக தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளின் கூரைப்பகுதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் முன்னெடுத்துள்ளது.





