காதலை மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!!

658

knifகாதலை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த காதலன் அதிகாலை 4 மணியளவில் காதலியின் கழுத்தை அறுத்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த காதலனை பிரதேச மக்கள் பிடித்து புஸல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நாவலப்பிட்டி நீதவான் எல்.கே.மகிந்த முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தணமல்வில பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் இராணுவத்தில் பணியாற்றி விலகியவர் எனவும் கடந்த ஒரு வருடமாக கம்பளை புஸல்லாவ டெல்டா கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் பொருத்தம் இல்லை என கருதி பெண் காதலை புறக்கணித்துள்ளார். இதனால் காதல் தொடர்பை துண்டித்து கொள்வோம் என அந்த பெண் காதலனிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து பேச காதலன் தணமல்வில பிரதேசத்தில் இருந்து புஸல்லாவ பகுதிக்கு வந்துள்ளார். நேரம் பிந்தியதால் இந்த நபரை அன்றிரவு வீட்டில் தங்கி விட்டு காலையில் தணமல்வில திரும்ப பெண் வீட்டார் இடமளித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு பெண்ணை அழைத்து மீண்டும் காதல் பற்றி பேசியுள்ளார். பெண் காதலுக்கு எதிர்ப்பை வெளியிட்டதால் ஆத்திரமடைந்த காதலன் கத்தி ஒன்றை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். வீட்டில் உள்ளவர்களும் கிராமவாசிகளும் இணைந்து கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் கிணற்றில் விழுந்த நபரை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருக்கும் பெண் புஸ்ஸலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.