கடந்த இரண்டு நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தி 517 பேர் கைது!!

717

arrest1மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கடந்த 48 மணித்தியாலங்களில் 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் இதன்போது 234 பேர் கைதாகியுள்ளனர்.

இது தவிர விபத்துக்கள் காரணமாக 546 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 201 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தேசிய மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

வீதி விபத்துக்களில் சிக்கிய நிலையில் 114 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கேளிக்கை மற்றும் வாண வேடிக்கை விபத்துக்கள் காரணமாக காயமடைந்த இரண்டு சிறார்களும் இதன்போது சிகிச்சை பெற்று வருவதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.