வவுனியாவிற்கு வருகைதந்த தமிழ் நாடு தவத்திரு சுந்தரராச அடிகளார்!!

631

தவத்திரு சுந்தரராச அடிகளார்

தமிழ் நாடு, திருமுருகநாத சுவாமி திருமட முதல்வர் தவத்திரு சுந்தரராச அடிகளார் வவுனியாவிற்கு வருகை தந்து கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்து கொண்டார்.

சிவபூமி திருவாசக விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாடு, அன்னைப்புதூர், திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி திருமட முதல்வர் தவத்திரு சுந்தரராச அடிகளார் மற்றும் தமிழ் நாடு திருமுறைக் கலாநிதி, பண்ணிசை பேரறிஞர் கலைமாமணி திருத்தணி நா.சுவாமிநாதன் ஓதுவார் ஆகியோர் நேற்று வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கெடுத்ததுடன்,

ஆலயத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்கள் மற்றும் அடிகளாரை தரிசிக்க சென்றவர்களுக்கு ஆசிகளையும் வழங்கினார்.

அடிகளார் மற்றும் பண்ணிசை ஓதுவார் ஆகியோருக்காக கந்தசாமி ஆலய பிரதம குரு உமா சுதக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இதில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக் கிளைத் தலைவர் சிவ.கஜேந்திரகுமார், வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் திருக்கேதீஸ்வரன், வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன், கந்தசாமி ஆலய நிர்வாக சபை உறுப்பினர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.