கதை கூறி கடத்தல்காரர்களை மடக்கியப் பிடித்த பொலிசார்!!

517

Thefசென்னையில் கடத்தல் கும்பலினை கதை கூறி பொலிசார் மடக்கி பிடித்துள்ள ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சாஸ்திரிநகர் 12வது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் கடந்த திங்கட்கிழமை மர்மகும்பலால் காரில் கடத்திச்செல்லப்பட்டார்.

மாணவியை பொலிசார் பத்திரமாக மீட்டாலும், அவர் மீட்கப்படவும், கடத்தல்காரர்கள் தங்களது பிடிவாதத்தை தளர்த்தியதற்கும் பொலிசார் ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

மாணவி கடத்தப்பட்டதில் இருந்து எவ்வித சாப்பாடும் சாப்பிடாமல் அடம் பிடித்தார். இதனாலும் சாப்பிடச்சொல்லி அவரை கடத்தல்காரர்கள் அடித்து துன்புறுத்தியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது.

இதைப்பார்த்து கடத்தல்காரர்கள் பயந்து மாணவி மயக்கம் போட்டு விழுந்த தகவலை அவரது தந்தையிடம் போனில் கூறியுள்ளனர். அவரது தந்தையும், பொலிசார் அறிவுரையின் பேரில், கடத்தல்காரர்களை கலங்கவைக்கும் ஒரு கதையை அவிழ்த்து விட்டார்.

மாணவிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது அவள் வேளா, வேளைக்கு சாப்பிடாவிட்டால் மயக்கம் வரும் என்றும், மயக்கம் வந்தால் உடனடியாக ஒரு மாத்திரை சாப்பிடுவாள் எனவே அந்த மாத்திரையை கொடுக்காவிட்டால், வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்த கதையை கேட்டு கலங்கிய கடத்தல் கும்பல் மாத்திரை பெயரை சொல்லும்படி கேட்டுப்பார்த்துள்ளனர். அந்த மாத்திரை எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்காது, குறிப்பிட்ட மருந்து கடையில் மட்டுமே கிடைக்கும் என்று தந்தை கூறியுள்ளார்.

அதுவரை மிரட்டி வந்த கடத்தல்காரர்கள், இதற்கு பிறகு தங்களது பிடிவாதத்தை தளர்த்திவிட்டு 2 கோடி வேண்டாம் என்றும் 50 லட்சம் தந்தால் போதும் என கூறி குறிப்பிட்ட மாத்திரையுடன் ராமாவரம் என்ற பகுதிக்கு வரச்சொல்லியுள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்திய பொலிசார் தங்களது வியூகத்தை அமைத்து ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்துவிட்டனர்.

அதுவரை பல இடங்களுக்கு தந்தையை வரச்சொல்லி அலைக்கழித்த கடத்தல்காரர்கள், அதன்பிறகு அலைக்கழிக்காமல் ராமாவரத்திற்கு சொன்னபடி வந்து மாட்டிக் கொண்டனர்.