வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!

2


ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்


வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இன்று (17.07) நடைபெற்றது.வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட, மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


தமிழர்களின் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆடிக்கூழ் வழங்கப்பட்டது.


நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா எமது பாரம்பரிய உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக 99 வீதமான தாய்மார்கள் சத்தி ரசிகி ச்சை மூலமே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே உடற்பயிற்சிகள் மற்றும் எமது பாரம்பரிய உணவு முறைகளை கைவிடக்கூடாது என தெரிவித்தார்.

ஆடிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி செல்வராசா மதுரகன் கோதுமை மாவின் வருகையுடன் எமது பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் தலைகீழாக மாறிவிட்டது,

எமது சமூதாயத்தில் ஏற்பட்டுள்ள தொ ற்றா நோ ய்க்கு காரணமாக இருக்கும் உணவுகளை தவிர்த்து எமது பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறும்போது 99 வீதமான தொ ற்றா நோ ய்களை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.