வவனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (26.12) தப்பியோடியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிதம்பரபுரத்தைச் சேர்ந்த செல்வநாயகம் ரவிக்குமார் என்ற கைதியே நீதிமன்றத்தில் வைத்து தப்பியோடி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியுள்ள கைதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திலும் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் கைதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவத்தனர்.




