ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு முதல் பயணிகள் கப்பல்!!

614

mv-voyagerஇலங்கையின் ஹம்பாந்தோட்டை மாகம் ருகுனுபுர மஹிந்த ராஜபக்ச துறைமுகத்துக்கு முதல் தடவையாக பயணிகள் கப்பல் ஒன்று சென்றுள்ளது. கடந்த 21 ஆம் திகதின்று இந்த துறைமுகத்துக்கு சென்ற இந்த கப்பலே துறைமுகம் திறக்கப்பட்ட பின்னர் சென்ற முதலாவது கப்பலாக இருந்தது.

எம்வி வேயேஜர் என்ற இந்த கப்பலில் 365 பயணிகளும் 224 பணியாளர்களும் பயணித்தார்கள். இந்த கப்பல் ஹம்பாந்தோடை துறைமுகத்தில் சுமார் 11 மணித்தியாலங்கள் தரித்திருந்தது. இந்த கப்பல் துபாய், ஓமான், இந்தியாவின் ஊடாகவே ஹம்பாந்தோட்டைக்கு சென்றது.

இதற்கு முன்னதாக இந்தக்கப்பல் டிசம்பர் 18 ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்று இரண்டு நாட்கள் அங்கு நங்கூரமிட்டிருந்தது.