நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சாகும் வரையிலான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்களாக பணியாற்றி வந்த 17 தற்காலிக ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தாம் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமக்கு நிரந்த நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நடைபெற்று வருகின்றது. இதேவேளை நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்திய யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒரு தொகுதி தொண்டர்களுக்கு நேற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.





