பேஸ்புக் ஊடாக இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : அரசாங்கம் எச்சரிக்கை!!

270

அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கையில் இணையம் வழியாக நடத்தி செல்லப்படும் நிதி சேவை ஊடாக பணம் பெற்றுக்கொள்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த செயற்பாடு குறித்து இலங்கை கணினி பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக் ஊடாக குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று இலங்கையர்களை ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நாட்களில் இயங்கும் flashcashloan.lk என்ற நிறுவனத்தினால் 2 வீதம் வரையிலான குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக பேஸ்புக் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையினால் குறித்த பேஸ்புக் பக்கத்தை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த வட்டியின் கீழ் கடன் வழங்குவதாக கூறி பொது மக்களிடம் பண மோசடி செய்வதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.