வவுனியா இளம் பெண் யாழில் ஐவரால் பாலியல் பலாத்காரம்!!

673

vavuniyaவவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வைத்து பலாத்காரமாக 5 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக கடந்த 24ம் திகதி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஐவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இது சம்பந்தமாக சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுவருவதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது யாழ்பாணம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.