திருகோணமலை புல்மோட்டை, புடவைக்கட்டு செந்தூர் நகர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.
விளையாடிக் கொண்டிருந்த போது தாம் கண்டெடுத்த கைக்குண்டு ஒன்றை கல் ஒன்றின் மீது வீசியபோதே அது வெடித்துள்ளது. இதன்போது 6 வயதான சிறுவன் அந்த இடத்திலேயே பலியானார்.
ஏனைய இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.