பயனர்களின் மொபைல் சாதனங்களை வெகுவாக பாதிக்கும் FaceApp : வெளியானது அதிர்ச்சித் தகவல்!!

1183

FaceApp

கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் தமது இளமைப் புகைப்படத்தினை வயதானவர்களின் தோற்றத்துக்கு மாற்றி பகிர்ந்து வருகின்றனர் மக்கள். இது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

இதற்காக FaceApp எனும் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் இதற்கு பின்னால் பாரிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்களின் மொபைல் சாதனங்களில் இருக்கும் அந்தரங்க தரவுகளை திருடக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிப்பதனால் மொபைல் சாதனங்களின் செயற்பாட்டில் மந்த நிலையையும் ஏற்படுத்துவதாக Kaspersky நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.