கோரமாக மாறிய முகத்தால் பிரித்தானியா திரும்ப முடியாமல் அவஸ்தையடைந்த மாணவி!!

300

அவஸ்தையடைந்த மாணவி

ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற ஸ்காட்லாந்து மாணவியின் முகம் வீங்கியிருந்ததால், அவரை விமானத்தில் ஏற ரியான் ஏர் விமான நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷானன் வோதர்ஸ்பூன் என்கிற 24 வயதான மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு நாடு திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு தோல் அழற்சி ஏற்பட்டு முகம் வீக்கமடைந்துள்ளது. அதேசமயம் அவருடைய பாஸ்போர்ட்டில் நீர் புகுந்ததால் சிறிது சேதம் ஏற்பட்டிருந்துள்ளது.

விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்ட ரியான் ஏர் விமான நிர்வாக பணிப்பெண், இரண்டு முறை சரிபார்த்து விட்டு பயணம் செய்ய முடியாது என ரத்து செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஷானன், 10 மணி நேரம் விமான நிலையத்தில் தனியாக காத்திருந்துள்ளார். மேலும் 200 பவுண்டுகள் செலுத்தி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து வீடு திரும்பியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட அவருடைய தந்தை தற்போது ரியான் ஏர் விமான நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து விமான நிர்வாகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.