சுவான் திடீரென ஓய்வு பெற பீட்டர்சன் காரணமா?

602

Swannஅவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வி அடைந்த காரணத்தால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து சுழற்பந்து வீரர் சுவான், திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த உடற்தகுதியுடன் இல்லாததே இதற்கு காரணம் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சக வீரரான பீட்டர்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே ஓய்வு பெற காரணம் என தகவல்கள் வெளியானது.

இதனை மறுத்துள்ள சுவான், பீட்டர்சனுக்கும் தனக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் தன்னுடைய விருப்பப்படியே ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று சுவானுடன் எவ்வித பிரச்னையும் இல்லை என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.