அவமானம் தாங்காமல் த ற்கொ லை செய்து கொண்ட இளம்பெண் மருத்துவர் : கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள்!!

521

இளம்பெண் மருத்துவர்

மும்பையில் சாதி பெயரை சொல்லி சித் ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் த ற்கொ லை செய்த வழக்கில் கைதான 3 பெண் மருத்துவர்களுக்கு எதிராக பொலிசார் 1,203 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த மே மாதம் 22ம் திகதியன்று தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.

அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு நேரே விடுதிக்கு சென்ற பயல், நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார். 4 மணி நேரம் கழித்து தான், அவர் தூ க்கில் தொ ங்குவதை மற்றவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்த பொலிஸ் விசாரணையில் சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி பயலை து ன்புறுத்தியதால் ஏற்பட்ட அவமானத்தில் இம்முடிவை எடுத்தது தெரியவந்தது.

மேலும், பயல் எழுதி வைத்திருந்த கடிதத்தின் ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை சமீபத்தில் பொலிசார் கைப்பற்றினர். அதில், மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் சாதி ரீதியாக மோசமாக பேசி துன் புறுத்தினார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஹேமா அஹுஜா, அன்கிதா, மேரே ஆகிய மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில், பயல் த ற்கொ லை வழக்கில் கைதான 3 பேருக்கு எதிராகவும் நேற்று குற்றப்பிரிவு பொலிசார் நீதிமன்றத்தில் 1,203 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில் 274 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளார்கள், மூவருக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதால் அவர்களுக்கு இந்த வழக்கில் தகுந்த தண் டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.