15 ஆண்டுகளாக மூன்று கிராமங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யும் பெண்!!

655

இலவசமாக நீர் விநியோகம்

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலவசமாக மூன்று கிராமங்களுக்கு பெண் ஒருவரும், அவரது குடும்பத்தினரும் நீர் விநியோகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட லிஹினிபிட்டிய பகுதியில் இவ்வாறு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

சுஜானி தீபிகா ரணசிங்க என்ற பெண்ணும், அவரது குடும்பத்தினரும் இவ்வாறு எவ்வித தயக்கமும் இன்றி நீர் விநியோகம் செய்து வருகின்றனர். மூன்று கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகின்றது. பல மைல் தொலைவில் உள்ள கிராம மக்கள் கால் நடையாகவும், முச்சக்கர வண்டியின் ஊடாகவும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று நீர் பெற்றுக்கொள்கின்றனர்.

குழாய்க் கிணறு நீரை மோட்டார் மூலம் பாய்ச்சி இவ்வாறு மக்களுக்கு குறித்த பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் நீர் வழங்கி வருகின்றனர். தாங்கள் குளிப்பதற்கு கூட நீரைப் பயன்படுத்தாது கிராமங்களின் மக்களின் குடிநீர் தேவைக்காக இவ்வாறு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.