காணாமல் போன சிறுவனை வலைவீசி தேடும் பொலிசார்!!

657

missingகனடாவின் நித் நதியில் காணாமல் போன சிறுவனை பொலிசார் தேடி வருகின்றனர். கனடாவின் தென் மேற்கு ஒன்றோரியாவில் அமைந்துள்ளது நித் நதி(Nith River).

நேற்று மாலையிலிருந்து 5 வயது சிறுவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது, இச்சிறுவனது உடைகள் நதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே காணாமல் போன சிறுவன், உறைந்துள்ள நீரினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவசர மீட்புப்பணியாளர்கள், கடல் பகுதியினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் குறித்த சிறுவன் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.