பாடசாலை மாணவர்கள் இருவரின் மோசமான செயல் : வசமாக சிக்கினர்!!

346

மோசமான செயல்

ஹட்டன் – மஸ்கெலியா பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் இருவர் பரீட்சை வினாத்தாள்களை களவாடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் தவணை பரீட்சைக்காக மத்திய மாகாணத்தில் இருந்து அச்சிடப்பட்டு அனுப்பப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள் பேயாலோன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரின் காரியாலயத்தில் பொதி செய்யபட்ட நிலையில் இருந்துள்ளது.

இந்த நிலையில் பரீட்சை வினாத்தாள்கள் இருந்த பொதி உடைக்கபட்டு இருந்ததை அவதானித்த அதிபர், சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்களை கைது செய்துள்ளனர். அதிபர் காரியாலயத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் வழியாக சென்று பொதி செய்யபட்டிருந்த விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான வினாத்தாள்களை குறித்த இரு மாணவர்களும் களவாடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மாணவர்கள் இருவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.