மிரண்டுபோன பொலிஸார்

கொழும்பு, வெள்ளவத்தையில் 82 லட்சம் ரூபா பெறுமதியான இரத்தின கல் திருடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று மாலை பம்பலப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரின் பையில் 82 லட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் மற்றும் 130000 ரூபா பெறுமதியான காசோலை புத்தகம் திருடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பொருட்களை கொள்ளையடிக்கும் நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுட்பமான முறையில் கொள்ளையடிக்கும் செயற்பாடு குறித்து பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.




