இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் இராட்சத விமானம்!!

385

உலகின் இராட்சத விமானம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநோவ் AN124 என்ற விமானம் அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. இன்று அதிகாலை 1.34 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த விமானம் பத்தாவது முறையைாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து ஜகர்த்தா நோக்கி பயணித்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

விமானத்திற்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக தரையிறங்கியுள்ளது. 98 இலட்சம் ரூபா பெறுமதியான 112400 லீற்றர் எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் ரஷ்யா நோக்கி இந்த விமானம் பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது