கொழும்பில் உயிராபத்து ஏற்படும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

520

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கழிவு பொருட்களால் கொழும்பு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கழிவுகளில் இருந்து பாரிய துர்நாற்றம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு துறைமுக பகுதிகளில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

களஞ்சியத்திலுள்ள கொள்கலன்களில் உள்ள கழிவுகள் பழுதடைய ஆரம்பித்துள்ளமையினால் அதன் கதவுகளை திறந்து சோதனையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுங்க பிரிவு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். குப்பைகளை அடையாளப்படுத்தி கொள்ள முடியாத அளவிற்கு குப்பை பழுதடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலை கழிவுகள் அதிகமாக இருப்பதனாலேயே இந்த நாற்றம் வீசுவதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குப்பையை சோதனையிடுவதற்காக அந்த கொள்கலன்களை திறப்பதே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இதனை திறக்காமல் மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைப்பதே சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களில் மனித உடற்பாகங்கள் இருப்பதாக ஏற்கனவே சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை கொழும்பு வாழ் மக்களின் உடல் நலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.