உங்களை போல கால்விரல்களை சேதப்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர் இனி உருவாகப்போவதில்லை : மலிங்கவிற்கு குவியும் புகழாரம்!!

11


லசித் மலிங்க


நேற்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள லசித் மலிங்கவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் டுவிட்டரில் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.உங்கள் அற்புதமான பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் யோர்க்கர் கிங் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். உங்களை போல கால்விரல்களை சேதப்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் இன்னொருவர் ஒருபோதும் வரப்போவதில்லை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


உங்களுடன் ஒரே ஓய்வறையை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தமை எனது அதிஸ்டம் என பங்களாதேசின் முஸ்டபிசுர் ரஹ்மான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நீங்கள் திட்டமிடுவதில் எவ்வளவு வல்லவர் என்பதும் மற்றவர்களை ஊக்குவிப்பதில் எவ்வளவு திறமைசாலி என்பதும் எவ்வளவு நல்லமனிதர் என்பதும் எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நீங்கள் பெரும் சாதனையாளன், உங்களிடம் உள்ள போராடும் குணம் அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்ககூடியது, ஒருநாள் கிரிக்கெட் உங்களை இழந்து தவிக்கப்போகின்றது நீங்கள் என்றும் நினைகூறப்படுவீர்கள் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.

மும்பாய் இந்தியன் அணிக்காக கடந்த தசாப்தங்களில் விளையாடி போட்டியை வெல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யவேண்டுமென்றால் இவர் அந்த பட்டியலில் முன்னணியில் காணப்படுவார் என ரோகித்சர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அணித்தலைவர் என்ற அடிப்பயைடில் நான் மிகவும் நெருக்கடியா பதட்டமா காணப்பட்ட தருணங்களில் லசித்மலிங்க எனக்கு ஆறுதல் அளித்துள்ளார் எனவும் ரோகித்சர்மா குறிப்பிட்டுள்ளார். அவர் ஒருபோதும் ஒரு பந்துவீச்சாளராக தனது பணியை நிறைவேற்ற தவறியதில்லை,எனவும் ரோகித்சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் மலிங்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிததுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேலஜெயவர்த்தன 22 வயது மலிங்கவை வலைப்பயிற்சியில் சந்தித்ததை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் உங்களிற்கு உண்மையாக இருந்துள்ளீர்கள் அனைத்தையும் விட நீங்கள் சிறந்த நண்பர் இலங்கையை பெருமிதம் அடையச்செய்தவர் என மகேலஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ரங்கனஹேரத் உபுல் தரங்க உட்பட பல இலங்கை வீரர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.