சிம்புவை மாற்றியது ஹன்சிகா அல்ல சந்தானமே!!

462

simbu

சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்புதான். அதே சிம்புவை தற்போது மீட்டெடுத்துள்ளார் சந்தானம். இப்போது சிம்பு கையில் ஆறு படங்கள் இருக்கிறது. இதில் கௌதம் மேனன் இயக்குகிற படமும், செல்வராகவன் இயக்கவிருக்கிற படமும் முக்கியமானவை.

இதையடுத்து புத்தாண்டு பிறந்த கையோடு மேலும் இரண்டு பெரிய படங்களை அறிவிக்க இருக்கிறாராம் சிம்பு. எனக்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பியவர்களுக்கு பதிலடியாக என்னுடைய பட அறிவிப்புகள் இருக்கும் என்று கூறியிருக்கிறார் அவர். ஆனால் அவரை இந்தளவுக்கு சுறுசுறுப்பாக்கியது எது, சந்தானத்தின் அறுவுரைகள் தானாம்.

ஒரு நாள் சிம்புவை ஸ்பெஷலாக சந்தித்த சந்தானம் இன்னைக்கு உங்களுக்காகவே என்னோட ஷுட்டிங்கையெல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன். நிறைய பேசணும் என்று கூறிவிட்டு அமர்ந்தாராம். அட்வைஸ் என்று போனால் அது எரிச்சலுட்டும் என்பதால், திடீர் ஹீரோக்களில் இருந்தே ஆரம்பித்தாராம் தனது அறிவுரையை.

அதை கேட்க ஆரம்பித்த சிம்புவுக்கு அதற்கப்புறம்தான் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறியிருக்கிறது.

சிம்புவிற்கான இடம் அப்படியேதான் இருக்கு. அதில் நீங்கள் உட்கார்ந்தால் போதும். அதுக்கு கொஞ்சம் உழைக்கணும். சொன்ன நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரணும். படப்பிடிப்பை திடீர்னு ரத்து செய்யக்கூடாது என்ற ஏராளமான நல்ல விஷயங்களை புகட்டினாராம் சந்தானம்.

அதற்கப்புறம் சிலிர்த்தெழுந்துவிட்டார் சிம்பு. இன்று மார்கெட்டிலிருக்கும் திடீர் ஹீரோக்களை முந்திக்காட்டுவதுதான் மறுவேலை என்கிறாராம்.