குடிநீரால் ப றிபோன 4 வயது குழந்தையின் உ யிர்!!

633

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் நகரில் அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் 4 வயது குழந்தை உ யிரிழந்த சம்பவம் அவ்வூர் மக்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் நகரை சேர்ந்தவர் பனியன் தொழிலாளியான படையப்பா நடேசன் என்பரின் 4 வயது மகன் லோகேஷ் என்ற சிறுவனே இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார்.

லோகேஷுக்கு கடந்த 14 ஆம் தேதி அதிக காய்ச்சல் ஏற்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கே காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துவிட்டான்.

இதற்கிடையே படையப்பா நகர் பகுதி மக்கள், ஊத்தக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது ஒரு வாட்டர் பாட்டிலில் அவர்கள் அருந்தும் கலங்கலான குடிநீரை பிடித்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்து “குடிநீர், சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனாலதான் எங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இதை பற்றி எத்தனையோ முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது இந்த குழந்தையோட உயிர் அநியாயமா போய்விட்டது உ யிரிழப்பிற்கு நியாயம் தேவை. அடிப்படை வசதிகளும் எங்களுக்கு உடனடியா தேவை” என்று மறியலின்போது ஆவேசத்துடன் மக்கள் கூறினார்கள்.

இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். மேலும் அவர்களிடம் பெண்கள் குறைகளை சொல்லி கொண்டே போனார்கள். அதன் பிறகு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.