இலங்கையை விட்டு வெளி யேறுகிறாரா லசித் மலிங்க?

441

லசித் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவு ஸ்திரேலியாவில் குடியேறப் போவதாக தகவல்கள் வெளியாகின எனினும் இந்தத் தகவல் உண்மையில்லை என லசித் மாலிங்க மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியேறப் போவதாக வெளியாக தகவல்கள் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாலிங்க, நான் அவுஸ்திரேலியா செல்கிறேன் என கூறியது யார் என எனக்கு தெரியாது. எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.

நான் அவுஸ்திரேலியா செல்வதாக கூறியவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும். எனக்கே தெரியாத விடயங்களுக்கு நான் பதிலளிக்க தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போ ட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டியில் இருந்த லசித் மாலிங்க ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.