பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு!!

481

மோசமான செயற்பாடு

வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய பெண் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான குறித்த பெண் இதுவரையிலும், பத்துக்கு மேற்பட்ட வீடுகளை உடைத்து நகைகளை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டு யன்னலை உடைத்து, வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிய நிலையில், அவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சந்தேகநபரான பெண்ணுக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 திருடப்பட்ட சில பொருட்கள் சந்தேகநபரை கைது செய்தபோது பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும், திருடப்பட்ட சில நகைகளை குறித்த பெண் அடகு வைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.