வன்னியில் 12 மாடுகளை கொ ன்று குவித்த டிப்பர் வாகனம் : வீதியில் கிடக்கும் உடல்கள்!!

756

டிப்பர் வாகனம்

மாங்குளம் – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றிரவு (27.07.2019) இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 12 எருமை மாடுகள் உ யிரிழந்துள்ளது. மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் கல்குவாரிக்கு அண்மித்த பகுதியில் வீதியில் நின்ற எருமை மாடுகளை அவ்வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் 12 எருமை மாடுகள் இ றந்துள்ளது.

எனினும் டிப்பர் வானத்திற்கு சிறியளவில் சேதமேற்பட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. சாரதிகளின் அவதானமின்மையும் கால்நடை வளர்ப்பாளர்களினது அசமந்தபோக்கே இவ் விபத்திற்கு காரணமாகும்.

கால்நடை வளர்ப்பாளர்களே உங்களது கால்நடைகளை இரவு நேரத்தில் வீதியில் விடுவதை தவிர்ப்பதன் மூலம் கால்நடைகளை பாதுகாக்க முடியும் என்பதுடன் வீதி விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.