வவுனியா பம்பைமடு பகுதியில் பாரிய தீ!!

946

பாரிய தீ

வவுனியா, பம்பைமடு பகுதியில் பாரிய தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு பிரிவினரின் நீண்டநேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வவுனியா, மன்னார் வீதியில் பம்பைமடு பகுதியில் உள்ள யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகம் அருகில் காணப்பட்ட காட்டுப் பகுதியில் இன்று மதியம் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டு எரிந்துள்ளது.

குறித்த தீ வேகமாக பரவலடைந்து அருகில் காணப்பட்ட குடிமனை மற்றும் பல்கலைக்கழகம் என்பவற்றைநோக்கி நகர்ந்த நிலையில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினரும், பூவரசன்குளம் பொலிசாரும் இணைந்து ஒரு மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காற்று காரணமாக தீ வேகமாக பரவலடைந்து சென்றது. இதனால் கட்டுப்படுத்துவது தொடர்பில் தீயணைப்பு பிரிவினர் பொலிசார் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கினர். குறித்த தீ விபத்து காரணமாக காட்டுத் தொகுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.