தூ க்கில் தொ ங்கிய இளம்பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!!

244

இளம்பெண் மருத்துவர்

இந்தியாவில் த ற்கொ லை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த இளம்பெண் பயல் தட்வி. இவர் மருத்துவர் ஆவார்.
பயல் கடந்த மே மாதம் 22ஆம் திகதி தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்த பொலிஸ் விசாரணையில் சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி பயலை து ன்புறுத்தியதால் ஏற்பட்ட அவமானத்தில் இம்முடிவை எடுத்தது தெரியவந்தது. மேலும், பயல் எழுதி வைத்திருந்த கடிதத்தின் ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை சமீபத்தில் பொலிசார் கைப்பற்றினர். அதில், மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் சாதி ரீதியாக மோசமாக பேசி து ன்புறுத்தினார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும், நான் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த சூழல் என்றும் மாறாது, என்னுடைய நம்பிக்கை முற்றிலுமாக போய்விட்டது என எழுதப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஹேமா அஹுஜா, அன்கிதா, மேரே ஆகிய மூன்று மருத்துவர்கள் கை து செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையின் மூலம் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பயல் த ற்கொ லை செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு எச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு ஒரு ஆப்ரேஷன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊசி அவர் மீது குத்தி காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனக்கு மருத்துவ விடுப்பு வேண்டும் என பயல் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் த ற்கொ லைக்கு காரணமான மூன்று மருத்துவர்களில் ஒருவர் கட்டாய மருத்துவ விடுப்பு இருந்தும் கொடுக்க முடியாது என வேண்டுமென்றே நிராகரித்துள்ளார்.


இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பயல் பாதிக்கப்பட்டுள்ளார். இதோடு எச்ஐவி சிகிச்சை தொடர்பான வகுப்பில் அவர் வாந்தி எடுத்துள்ளார், இதையெல்லாம் கணக்கிலேயே கொள்ளாமல் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதுவும் பயல் த ற்கொ லை முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.