போலி விசாவில் லண்டன் செல்ல முயன்ற முல்லைத்தீவுப் பெண் கைது!!

556

பெண் கைது

போலி விசா அனுமதியை பயன்படுத்தி இங்கிலாந்து செல்ல முயற்சித்த பெண்ணொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் பகுதியில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அந்த பெண்ணை கை து செய்துள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு இன்று கை து செய்யப்பட்டுள்ளார். இவர் லண்டன் நோக்கி செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அந்த பெண் சமர்ப்பித்த விசா அனுமதியில் மாற்றங்கள் இருந்த காரணத்தினால், பெண்ணை தாம் கை து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. கை து செய்யப்பட்ட பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.