இயற்கையான பிரசவத்தின் போது உ யிரிழக்கும் தாய்மாரின் எண்ணிகை அதிகரிப்பு!!

545

பிரசவத்தின் போது..

இலங்கையில் பிரசவத்தின் போது தாய்மார் உ யிரிழப்பது அதிகரித்து வருவதாகவும் இயற்கையாக பிள்ளைகளை பெறும் ஒரு இலட்சம் தாய்மாரில் 40 தாய்மார் உ யிரிழப்பதாகவும் இலங்கை மருத்துவச் சங்கத்தின் செயலாளர் விசேட சமூக மருத்துவ நிபுணர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் இலங்கையில் 3 இலட்சத்து 26 ஆயிரம் தாய்மார் இயற்கை பிரசவத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளதுடன் இவர்களில் 15 வீதமானவர்கள் 35 வயதுக்கும் குறைவான பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மருத்துவச் சங்கமும் ஐக்கிய நாடுள் அமைப்பின் நிதியும் இணைந்து கொழும்பில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குடும்ப திட்டத்தை சுற்றி உருவாகியுள்ள மூட நம்பிக்கை மற்றும் அதனை போக்குவது தொடர்பான கலந்துரையாடலும் அங்கு நடத்தப்பட்டுள்ளது.