யாழில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் ச டலம் மீட்பு : வெளியாகியுள்ள புதிய தகவல்!!

516

பெண்ணின் ச டலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் ச டலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தின் உடற் கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ச டலமாக மீட்கப்பட்ட பெண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், தப்பிக்க கூடாது என்பதற்காக தனது கைகளை தானே கட்டி குறித்த பெண் கிணற்றிற்குள் பா ய்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தம்பசிட்டி, கதிரவேற்பிள்ளை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெகநாதகுரு கிருபாலினி கடந்த 27ஆம் திகதி கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.