கல்வீச்சு
வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (28.07) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவைக்கு அண்மையில் இரு போக்குவரத்து பொலிசார் கடமையில் நின்றுள்ளனர். இதன்போது அவ் வீதி வழியாக வவுனியா நகரம் நோக்கி வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை செய்த போது,
அருகில் இருந்த மறைவான இடத்தில் இருந்து போக்குவரத்து பொலிசார் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். போக்குவரத்து பொலிசார் குறித்த இடத்தில் கல்வீசியவர்களை தேடியபோதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.