மன விரக்தியில் சென்று தண்டவாளத்தில் தலை வைத்த நபர் : யாழில் சம்பவம்!!

525

தண்டவாளத்தில் தலை வைத்த நபர்

யாழில் ம து போ தையில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது உ யிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் ம து போ தையுடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். உரும்பிராயை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப த கராறு காரணமாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த நபரின் மனைவி வன்னிப் பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகள் சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி, பிள்ளைகளை தன்னால் பார்க்க முடியாத விரக்தியில் வாழ்ந்து வந்ததனால் தனது உ யிரை மாய்க்கவே கொடிகாமம் பகுதிக்கு சென்று ம து அருந்தி விட்டு தண்டவாளத்தில் படுத்திருந்தேன் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த நபரை பொலிசார் சாவகச்சேரி நீதிவான் முன்னிலைபடுத்திய போது, நீதிவான் குறித்த நபரை சொந்த பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அடுத்த மாதம் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.