அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பால் மா விலையை அதிகரிக்க முடியாது : அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ!!

681

milkஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பால் மா விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் பால் மா விலை உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கையில் பால் மாவிற்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பால் மா விலையை உயர்த்துமாறு பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நிறுவனங்களின் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பால் மா விலையை அதிகரிக்க முடியாது.

கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் உலக சந்தையில் பால் மாவின் விலை உயர்வடைந்துள்ளது. எனினும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் டிசம்பர் மாதம் வரையில் நான்கு தடவைகள் பால் மாவின் விலை குறைவடைந்துள்ளது,

இந்த ஒரு சந்தர்ப்பத்திலேனும் உள்நாட்டு சந்தையில் பால் மாவின் விலை குறைக்கப்படவில்லை.

பெரும்பாலும் ஜனவரி மாதத்தில் உலக சந்தையில் பால் மா விலை வீழ்ச்சியடையும் எனவும் நிறுவனங்களுக்கு அஞ்சி விலையை உயர்த்தப் போவதில்லை எனவும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.