வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இனம்தெரியாத நபர்களால் வீடு தீக்கிரை!!

620

fireவவுனியா சுந்தரபுரம் பகுதியின் நேற்று இரவு வீடு ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா சுந்தரபுரத்தில் வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீடொன்றிட்கு சென்றிருந்தவேளையில் அதனை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீடிற்கு தீ மூடியுள்ளனர். இத் தீயில் வீடு முற்றாக எரிந்து சாம்பலானதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களும் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இது பற்றி வீட்டின் உரிமையாளர்கள் ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இதற்கமைய ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.