வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!!

2


பரிசளிப்பு நிகழ்வு


வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (30.07.2019) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் இ.தமிழழகன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.நிகழ்வில் கடந்த வருடத்தில் தமது திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர் கௌரவிப்பு, சகல பாடங்களிற்குமான சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதன் கலந்து சிறப்பித்தார்.


கௌரவ அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ வி.உத்தரியநாதன், க.பார்த்தீபன், ஆசிரிய ஆலோசகர்களான சி.பத்மநாதன், இ.மாதவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.