கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக ப லி!!

459

கோர விபத்தில்..

டிரக்டர் தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த வந்த நபர் உ யிரிழந்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (31.07.2019) இடம்பெற்றுள்ளது.

போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் இருந்து 03ம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற போதே குறித்த டிரக்டர் பாதையை விட்டு விலகி தடம் புரண்டத்தில் சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த கா யங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அதன் பிறகு அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு குறித்த இருவரையும் கொண்டு செல்லும் போது மேற்படி சேவையாளர் உ யிரிழந்துள்ளதாகவும் பலத்த கா யங்களுக்குள்ளான டிரக்டர் சாரதி அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் ப லியான நபர் 35 வயதுடைய எஸ்.பொடிமாத்தியா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் உ யிரிழந்த நபரின் ச டலம் அக்கரபத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு,

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.