வவுனியா பட்டதாரிகள் 199 பேருக்கு நாளை நிரந்தர நியமனம்!!

1240

வவுனியா பட்டதாரிகள் 199பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. வவுனியா பட்டதாரிகள் 199 பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் கிடைத்துள்ளது.

அக்கடிதங்கள் நாளை (01.08) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வவுனியா பட்டதாரிகள் 40பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மிகுதியாக உள்ள 159பேருக்கு நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா பட்டதாரிகள் 199பேருக்கும் பல்வேறு அரச துறைகளுக்காக அவர்கள் அந்நிறுவனங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.