11 நாள் குழந்தையை தவிக்கவிட்டு இளம் தாய் சுருக்கிட்டு தற்கொலை!!

1084

hangகடந்த 11 நாட்களுக்கு முன்பு சத்திர சிகிச்சை மூலம் ஓர் ஆண் குழந்தையைப் பிரசவித்த இளம் பெண் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ். அராலி வசந்தபுரம் பகுதியிலுள்ள தமது வீட்டிலேயே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் குறித்த இளம் தாய் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணையை பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.