மட்டக்களப்பில் வீதியில் அநாதரவாக விடப்பட்ட நான்கு நாட்களேயான சிசு!!

1320

நான்கு நாட்களேயான சிசு

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இருந்து சிசு ஒன்று மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீராவோடை – மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிசுவை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பெண் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை, வங்கிக்கு அருகில் பெண் சிசு ஒன்று இருப்பதைக் கண்டு, குறித்த சிசுவை மீட்டு நேற்று மாலை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.

இந்த சிசு நான்கு நாட்கள் மதிக்கத்தக்கது எனவும், 2970 கிராம் எடையுள்ளதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.