வீதியில் சென்ற தம்பதியருக்கு நேர்ந்த சோகம் : கணவன் ப லி, ஆபத்தான நிலையில் மனைவி!!

618

தம்பதியருக்கு நேர்ந்த சோகம்

மாவனெல்லயில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தம்பதியினர் விபத்துக்குள்ளானதில் கணவர் உ யிரிழந்துள்ளார். நேற்று காலை அரநாயக்க வீதியில் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோட்டார் சைக்கிள் மோதி வி பத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த கணவர் மற்றும் மனைவி அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் கணவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான இளைஞனே இந்த சம்பவத்தில் உ யிரிழந்துள்ளார். 25 வயதான மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த தம்பதியினர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். இருவரும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் எனவும், தினமும் அதிகாலை அரநாயக்கவில் இருந்து ரம்புக்கன வரை மோட்டார் சைக்கிள் அல்லது காரில் பயணிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.